பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையின் 4ஆவது மைல் கல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் 25-35 வயதுடையவர் எனவும், 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட டீ-சர்ட் மற்றும் க்ரீம் நிற காற்சட்டை ஒன்று அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.