பூநகரி, செம்மண்குன்றுபகுதியில் நேற்று முன்தினம் (23) மாலை, வீட்டுக்கு முன்னால் வீதியின் அருகே நின்ற ஓட்டோவில் யோகநாதன் நிலோஜன் (வயது 09) என்ற சிறுவன் பாணைக் கொள்வனவு செய்துவிட்டு, வீதியின் குறுக்கால் ஓடியபொழுது, முழங்காவில் வைத்திய சாலையில் இருந்து செம்மண்குன்று பகுதிக்கு நோயாளியை ஏற்றிச் செல்வதற்காக விரைந்து சென்ற அம்பியுலன்ஸில் சிறுவன் மோதியதில், படுகாயமடைந்த சிறுவன், பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலே சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது, சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக, புநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.