Home பருத்தித்துறை செய்திகள் ஆட்டுக்கு குழை வெட்டிய சிறுமி கிணற்றில் விழுந்து பலி: வடமராட்சியில் சோகம்

ஆட்டுக்கு குழை வெட்டிய சிறுமி கிணற்றில் விழுந்து பலி: வடமராட்சியில் சோகம்

சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக சிறுமி கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

READ MORE >>>  யாழ்.நகரில் உள்ள நகைக்கடையில் 11 பவுண் நகைகளை திருடிய 3 பெண்கள் மறுநாளே சிக்கினர்
Previous articleதேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம்! ஓய்வு பெற்ற வைத்தியரின் வீட்டில் மீட்கப்பட்ட பெரும் தொகை ஆயுதங்கள்
Next articleயாழில் தனியார் மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழப்பு