ஆபாச படங்களிற்கு அடிமையான 15 வயது மாணவன்: வீடியோ காட்சியை போல செயற்பட்டதால் 14 வயது மாணவி 7 மாத கர்ப்பம்
இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் அந்தரங்க படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் 15 வயதுடைய பாடசாலை மாணவனை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், 15 வயது மாணவன் கைது செய்யப்பட்டான்
சிறுமி தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியை முல்லேரியா வைத்தியசாலைக்கு தாயார் அழைத்து சென்றார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் ஒரே பாடசாலையில் 9, 10ஆம் தரத்தில் கல்வி பயில்பவர்கள். நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள்.
மாணவனின் இணைய வழி கல்விக்காக, பெற்றோர்கள் 27,000 ரூபாவுக்கு கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அந்த தொலைபேசியில் ஆபாசப்படங்களை பார்த்து பழக்கமடைந்த மாணவன், ஆபாச வீடியோவில் பார்த்த காட்சியை போல மாணவியுடன் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளான்.
இருவருக்குமே அவர்களின் நடவடிக்கையின் தீவிரம் குறித்து சரியான புரிதல் இல்லை என்றும், இதனால் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் உறுதியானது என்றும் விசாரணை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் இவ்வாறு நடந்துகொண்ட போதிலும், இருவருக்குமிடையில் காதல் தொடர்பில்லை என்பது பொலிசாரின் நீண்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாக நவகமுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.