Home Indian news ஏற்கெனவே 8… அடுத்த வாரம் மேலும் 2: கல்யாண ராணி கைது!

ஏற்கெனவே 8… அடுத்த வாரம் மேலும் 2: கல்யாண ராணி கைது!

8 ஆண்களை ஏமாற்றி திருமணம்ம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடுத்த வாரத்திற்குள் மேலும் இருவரை திருமணம் செய்யவிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

கரூரை சேர்ந்தவர் சவுமியா என்கிற சபரி (28). பி.காம். பட்டதாரி. இவரது பெற்றோர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

சவுமியா சிறுவயது முதலே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காத அவருடைய பெற்றோர் மகளை கண்டித்து உள்ளனர்.

இதையடுத்து பெற்றோரை பிரிந்த சவுமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு ராஜேஷ் என்கிற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பலரிடம் பணம் பெற்று உள்ளார்.

பின்னர் தனது கணவரிடம் அந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றி உள்ளார்.

இதுதொடர்பான புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் சவுமியாவை கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சவுமியா முதல் கணவரான போலீஸ்காரரை உதறி தள்ளிவிட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை 2வது திருமணம் செய்துள்ளார்.

அவருடன் ஒரு சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய அவர் அவரையும் கழற்றி விட்டு 3வதாக ஒருவரையும் மணந்துள்ளார்.

READ MORE >>>  பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

இப்படியே கட்டுவதும், கழற்றுவதுமாக 8 திருமணங்களை முடித்தார்.

இதற்கிடையே ராமநாதபுரத்தில் இருந்து சொந்த மாவட்டமான கரூருக்கு வந்த சவுமியா அங்கும் தனது கைவரிசையை காட்ட தொடங்கினார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியதை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சவுமியாவை மணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

தான் ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தனக்கு நெருங்கிய உறவினர் என்றும், அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் பணத்தை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர். மேலும், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதற்காக முன்பணமாக 50 லட்சம் ரூபாய் வரை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கரூருக்கு வந்த சிவக்குமாரை அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய பங்களாவை காட்டி அது, தமது தாயாரின் வீடு என்றும் தாம் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் சவுமியா கூறியுள்ளார்.

இந்நிலையில் மணப் பெண் பற்றி விசாரிக்குமாறு கரூரில் உள்ள உறவினருக்கு சவுமியாவின் போட்டோ ஒன்றை சிவக்குமார் அனுப்பியுள்ளார்.

சவுமியாவின் பெற்றோரிடம் விசாரித்த போது தங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். சவுமியா காட்டிய அந்த பெரிய பங்களாவும் அவருக்கு சொந்தமில்லை என்பதை தெரிந்து கொண்ட உறவினர் சிவக்குமாரிடம் இந்த தகவல்களை சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார்.

READ MORE >>>  தெரியாமல் மோதிய மாணவியை பாடசாலை கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை

கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்தித்தபோது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியா தங்கி இருக்கும் வீட்டினுள் சென்று அவரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சௌமியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேரை திருமணம் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சவுமியா, வரும் ஞாயிறன்று சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை கோவையை சார்ந்த மற்றொரு இளைஞரையும் திருமண செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் – 17/09/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleகாதலனை மகிழ்விக்க வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்த காதலி!