அரசுக்குச் சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி நெட்வொர்க் (ITN), வசந்தம் தொலைக்காட்சி என்பனவற்றின் ஒளிபரப்பும் இடை நிறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் வளாகத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பை மீறி தொலைக்காட்சியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயன்றதை அடுத்து ஒளிபரப்பு இடை நிறுத்தப்பட்டது.
முன்னதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஒளிபரப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நிலையத்தின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.