Home Local news ஐஸ்ஸுடன் ஒருவர் கைது

ஐஸ்ஸுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ரயில் நிலைய பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 67 வயதுடைய நபர், இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 37.6 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய, கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  18 வயது மாணவியின் சைக்கிள் கூடைக்குள் கடிதம் போட்ட 42 வயது இளைஞன் நையப்புடைப்பு!
Previous articleபிரபாகரன் இல்லத்தால் டெங்கு அதிகரிக்கும் அபாயமாம்; வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கை:
Next articleதனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கையர் மீட்பு