இவ்வருட சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்ற மாணவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய கொடூரன் கைது செய்துள்ளான்.
அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
26 வயதான நபரை பொலிசார் கைது செய்த போது, அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது.
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர் ஒருவர், இம்முறை க.பொத.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்றிருந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக தனது பாட்டியின் வீட்டிற்கு, தந்தையுடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் வழியில் மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீமூட்டப்பட்டது.
தீமூட்டிய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைதாகினார்.
பிரதேசத்தில் அறியப்பட்ட குற்றவாளியான அந்த நபர், வீதியில் நின்ற போது, தந்தையும் மகனும் சென்றதாகவும், அவர்களிடம் அந்த நபர் தகவல் கேட்க, தந்தையும் மகனும் பேசாமல் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர் சிறுவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மாணவரின் தலைக்குக் கீழே உள்ள பகுதி தீக்காயங்களுக்கு உள்ளதான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிட்டிய புனித கிளெமென்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே பாதிக்கப்பட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபர் மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கும்பலை உருவாக்கி அப்பகுதி மக்களை பயமுறுத்தி கப்பம், கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.