Home Ampara news காட்டு யானையால் இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

காட்டு யானையால் இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

அதிகாலை வேளையில் காட்டுயானையினால் வீடு உடைக்கப்படும்போது, தமது பிள்ளைகளை காப்பாற்ற முயற்சித்த வேளை யானை தாக்குதலுக்குள்ளாகி அவர் மரணமடைந்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்தள்ளது.

அத்துடன், காட்டு யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

READ MORE >>>  திருமணத்திற்கு முன் தவறான தொடர்புகள் இருந்தால் கடும் தண்டனை-நிறைவேற்றப்படும் புதிய சட்டம்
Previous article2 பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம்
Next articleசம்மந்தர் பாணியில் ரணில்!! அடுத்த சுதந்திரதினத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: நாடாளுமன்றத்தில் ரணில்