Home Local news கிழட்டு வைத்தியரின் திருவிளையாடல்!! சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் பாலியல் சேட்டை

கிழட்டு வைத்தியரின் திருவிளையாடல்!! சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் பாலியல் சேட்டை

குருநாகலை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற வந்த பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் உள்ள இந்த வைத்திய அதிகாரி நோய்களை பரிசோதிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டிற்கமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்டமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வைத்தியர் பெண்ணுடன் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக பல்வேறு பாலியல் விடயங்கள் தொடர்பில் தொலைபேசியில் உரையாடியதையடுத்து குறித்த பெண் தனது கைத்தொலைபேசியில் உரையாடலை பதிவு செய்து கணவரிடம் கொடுத்துள்ளார்.

இந்த வைத்தியரால் நடத்தப்படும் தனியார் சிகிச்சை நிலையத்துக்கும், வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக வரும் ஏராளமான பெண்களும் இவரால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் வெளியே தெரிந்தால் ஏற்படும் அவமானத்திற்கு பயந்து பெண்கள் மறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் நடத்தப்படும் பல மோசடிகளில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

முறையான விசாரணை நடத்தினால், இது தொடர்பாக தேவையான ஆதாரங்களை வழங்க மருத்துவமனை ஊழியர்கள் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், தனது நெருங்கிய நண்பர்கள் போல் நடித்து வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்துவதாகக் கூறும் இந்த வைத்தியர், தமக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண்ணிடமும் அவ்வாறே கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைத்தியருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைக்கமைய, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வடமேற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் காந்தி வெஹெல்ல தெரிவித்துள்ளார்..

Previous articleஅரச வங்கியில் ரூ.2கோடி பெறுமதியான நகைகள் மாயம்
Next articleபசறை விபத்தில் பெற்றோரை இழந்த மாணவியும் பரீட்சையில் சாதித்தார்