Home CRIME NEWS கொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதான இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !

கொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதான இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !

வெலிகம உறுவிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

தனுஷிகா நிபுனி என்ற 29 வயதுடைய திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண் முதல் கணவனை விட்டு பிரிந்து இரண்டாவது கணவனுடன் தெனிப்பிட்டிய, உருவியவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இறந்த பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (02) இரவு வீட்டில் மின்விளக்கு எரியாததால், அவரது தாயார், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மகள் சடலமாக கிடப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் இரண்டாவது கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

வெலிகம பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி. எம். அபேசேகர தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

READ MORE >>>  "நாவுல சுத்தா" படுகொலை ... 200 மீற்றர் தூரத்திற்கு மிளகாய் தூளை தூவி விட்டு சென்ற கொலையாளிகள்.
Previous articleயாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!
Next articleமீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!