Home Local news தம்பதியினர் கொடூர கொலை

தம்பதியினர் கொடூர கொலை

அம்பலாந்தோட்டை – ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Previous article17,20 வயது இளைஞர்கள் போதையில் அட்டூழியம்; யாழில் நிரோஜன் அடித்துக் கொலை:
Next articleமது போதையில் வேகமாக காரை செலுத்தி வீதியில் இருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலி.