Home Local news திருகோணமலையிலுள்ள காட்டுப்பகுதியொன்றில் இருந்து ஐந்து கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலையிலுள்ள காட்டுப்பகுதியொன்றில் இருந்து ஐந்து கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

FB IMG 1607207438554

குறித்த தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடபட்டப்போது, ஐந்து கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை, திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது என தெரிவித்த சேருவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

READ MORE >>>  சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!
Previous articleயாழ் பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா தொற்று
Next articleயாழ் பருத்தித்துறையில் ஒருவரின் உயிரை பறித்தது கொரோனா