Home Lifestyle தூக்கணாங்குருவியைப்போல் காதலியுங்கள்!

தூக்கணாங்குருவியைப்போல் காதலியுங்கள்!

“அப்படி என்ன தூக்கணாங்குருவிகளின் உன்னதமான காதல்”!…
பறக்க தெரிந்து தனது இறையை தானே தேடுட ஆரம்பித்து, தனது தாய் தந்தை குருவிகள் கட்டியிருக்கும் அற்புதமான கூட்டிலிருந்து தன் ஜோடியை தேடி ஆண் குருவிகள் வெளியேறும்!

கூடு கட்டுவது ஆண் குருவிதான், பெண் குருவிகளுக்கு கூடு கட்ட தெரியாது… அதனுடைய வீடு அது கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போதே அதனுடைய ஜோடியை அது தேடி பிடிக்கும், தான் கட்டியிருக்கும் கூட்டிற்கு தனது காதலியை கூட்டி வந்து காட்டும் காதலியை கவருவதற்காக கலிமண்ணில் மிண்மிணிபூச்சிகளை கூட்டினுள் வைக்கும், சிறுசிறு வண்ணப்பூக்களை கொண்டு கூட்டினை அலங்கரிக்கும், காதலிக்கு பிடித்தமான உணவை கூட்டினுள் வைத்து காதலிக்காக அது காத்திருக்கும்…

கிட்டத்தட்ட மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தான்… பிழைக்க கூடிய வயது வந்தவுடன் தனக்கென ஒரு வீட்டை கட்டுகிறான், சிலர் காதலித்து கல்யாணம் முடித்து வீடு கட்டுகின்றனர், சிலர் வீடு கட்டியப்பிறகே கல்யாணம் என்கின்றனர்…

தூக்குனாங்குருவியின் காதல்… ஆண் குருவி கூட்டைக் கட்டி கொண்டே தானும் இரை தேடி, இரை இருக்கும் இடத்தை தனது காதலிக்கும் காட்டிவிடும், மீண்டும் மரத்திற்கே அழைத்து வந்து, கூட்டையும் கட்டிக், இதுதான் என் வாழ்க்கை நான் இப்படித்தான் வாழ்கிறேன், என்னுடன் சேர்ந்து உனக்கு வாழ விருப்பமா? என பெண் குருவியின் சம்மதத்தை கேட்கும்…

பெண்களை போலவேதான் சில பெண் குருவிகள் ஏற்றுக்கொள்ளும், சில குருவிகள் ஆண் குருவி காட்டும் உணவை இருக்கும் இடத்தை அறிந்து அதை கலட்டிவிட்டு வேறொரு துணையை தேடும், ஆண் குருவிகள் அப்படி கிடையாது பெண் குருவிகளிடம் சண்டையிடாது அதை கட்டாயப்படுத்தாது, தனக்கான ஜோடி கிடைக்கும் வரை அது பல பெண் குருவிகளுடன் பழகிவரும்…

READ MORE >>>  பிகினி உடையில் அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள்!

அதனுடைய ஜோடி அதற்கு கிடைத்துவிட்டால், பெண் குருவி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும் வரை ஆண் குருவி தூங்கவே தூங்காது, ஏரத்தாள ஆண்களை போலத்தான் தன் மனைவி கருவுற்ற காலங்களில் பல ஆண்கள் விழித்துக்கொண்டுதான் இருப்பார்கள், குஞ்சு பொறிக்கும் வரை பெண் குருவி கூட்டைவிட்டு வெளியே போகாது எப்பேற்பட்ட காற்று மழையிலும் பெண் குருவி கூட்டை விட்டு வெளியேறாது,

இதில் மனிதர்களுக்கு அவை சொல்லிக்கொடுப்பது… குடும்பம் என்றால் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கத்தான் செய்யும் அவற்றை சமாளித்து கூட்டினிலேயே அதாவது கணவனிடமே வாழ பழகிக்க வேண்டும், குஞ்சு பொறிக்கும் வரை இடைவிடாத நேரத்தில் ஆண் குருவி தனது துணைக்கு இறை தேட தொடங்கும் பெண் குருவிக்கு ஆண் குருவிதான் இறையை ஊட்டிவிடும்…

இது எவ்வளவு அழகான காதல் நண்பர்களை…

இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும்,
ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டை கலைத்துப் போட்டு மீண்டும் கூட்டை சரி செய்ய இயலவில்லை! இந்தத் தருணம் வரை தூக்கணாங்குருவிக் கூடுகள் புதிரானவை! மர்மமானவை!

தான் வளர்ந்த கூட்டிற்குள் எந்த ஆண் குருவியும் மீண்டும் நுழைவது இல்லை! பெண் குருவிகள் கூட்டிற்குள் இருக்கும்! தன் மணவாளன் தனக்காகத் கட்டிய அந்த வீட்டிற்குள் காத்துக் கொண்டிருக்கும்!

அதே போல் அந்தக் கூட்டில் முதன் முதலாக காதலியை உள்ளே போக அனுமதித்து, அதாவது வலது காலை வைத்து அழைத்து பின்னால் செல்லும்!

காதலன் நீண்டதூரம் வரை பயணித்து பஞ்சுகளை சுமந்து, ஒரு படுக்கைஅறை, முட்டைகளை அடைகாப்பது, கழிவுகளை வெளியேற்றுவதும், குஞ்சு பொரித்து வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் அந்தக் கூட்டின் புடைத்த பகுதியில் இருக்கும்! குருவி வகைகளைச் சேர்ந்த சில பறவைகள் கூட்டைப் பூக்களாலும் அலங்கரிக்கும்.

READ MORE >>>  ஹெரோய்னுடன் பெண் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது

சில பறவை இனங்கள் கூடு முழுவதும் வெளியே மலர்களால் அலங்காரம் செய்து, நடனம் ஆடும்! பின் கூடுகளுக்குள் செல்லும், பின் மீண்டும் வெளியில் வந்து நடனம் ஆடும்! சொக்கிப் போவாள் காதலி! உள்ளே வாழ்ந்து தீர்க்கும்!

விதவிதமாக வெஜ் – நான்வெஜ் போன்ற உணவுகளை, கிடைக்கும் அனைத்தையும் எடுத்துச் சென்று காதலிக்கு ஊட்டிவிடும்! காதலி கரு உருவாவாள். அதன் பின் இன்னும் அதிகம் கவனம் செலுத்தும்!

சத்தான அத்திப்பழங்கள், ஆலம்பழங்கள், கொய்யா, மா, மற்றும் என்னவெல்லாம் அரிதான பழம் கிடைக்கிறதோ நாவல்பழம் உட்பட! ஊட்டி ஊட்டி காதலியை இன்பத்தில் திளைக்க வைக்கும்.

இதில் இன்னொரு ஹைலைட் இருக்கு! ஆடிப்போவீர்கள். தான் வெளியே இரை தேடும் சில சமயங்களில் பாம்புகளாலோ, பருந்துகளாலோ தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ‘காதலியும் குழந்தையும் பட்டினி இருக்கக்கூடாது’ என்று, கர்ப்ப காலத்தில்… தானியங்களை உள்ளே குவித்து விடும்!!

இரை தேடும் போது சமயங்களில் பாம்புகள் காதலனைக் கவ்விப் பிடித்து விடும்! காதலி இரண்டு நாட்கள் தவிக்கும். வெளியே வந்து தேடிவிட்டு கூட்டுக்குள் ஓடும். மீண்டும் வெளியே வந்து படபடவென்று அடித்துக் கொண்டு உள்ளே வந்து விடும்!

இனி காதலன் வரமாட்டான், காதலனுக்கு என்னவோ நிகழ்ந்து விட்டது. இனி இந்த இரைகள் காலியாகி விடும்! தானே சம்பாதிக்க வேண்டும். குஞ்சுகளைப் பெரிதாக்கி வெளியே அனுப்ப வேண்டும், – மிக சின்சியராக வளர்க்கும்! இன்னொரு காதலனைத் தேடாது!

குஞ்சுகள் வளர்ந்து பெரிதானதும், “போ மகனே, சமத்தாய் போ மகளே, யாரோ ஒரு காதலன் உனக்காகக் கூடு கட்டிக் கொண்டிருப்பான். மகனே போ யாரோ ஒரு காதலி நீ வீடு கட்ட காத்திருப்பாள்! போய் வா செல்வங்களே…”

READ MORE >>>  முகநூல் காதல் ; இலங்கையில் 60 வயது காதலி மீது சரமாரி கத்திக்குத்து

என்று அனுப்பி வைத்து விட்டு அளவாய் இரைதேடி, உண்டு கூட்டுக்குள்ளயே முடங்கி ஒருநாள் அந்தக் கூட்டுக்குள்ளயே இறந்து கிடக்கும்! இப்போது சொல்லுங்கள்…

தூக்கணாங்குருவிகளைப் போல் காதலியுங்கள்!

Previous articleகனகராஜன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
Next articleஇன்றைய ராசிபலன் – 18/11/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..