சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அவ்விமானத்தில் பயணம் செய்த 9 விமான ஊழியர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்ய நாட்டில் பெலாரஸ் சரக்கு விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை அடுத்து நடுவானில் வட்டமிட்டபடி பறந்தது. அதன்பின், திடீரென விழுந்தது நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீயை போராடி அணைத்தனர்.
இதனால் விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஆண்டனவா ஏ.என்.12 என்ற விமானம், கடந்த 1970 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.