Home மலைநாட்டு செய்திகள் நானு ஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் கோரவிபத்து – மூவர் படுகாயம்

நானு ஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் கோரவிபத்து – மூவர் படுகாயம்

நானு ஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் கோரவிபத்து – மூவர் படுகாயம்

நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியொன்று பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் மரக்கட்டையை ஏற்றிச் சென்ற போது செங்குத்தான ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு லொறியை முந்திச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஏதிரே வந்த லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மற்றைய லொறியும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு லொறிகளில் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நானு ஓயா DSC07102 DSC07122

READ MORE >>>  பஸ்ஸில் கஞ்சா கடத்தல்: நடத்துநர் உள்ளிட்ட இருவர் கைது
Previous articleஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 28.02.2022
Next articleவவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஐவர் கைது