நேற்றைய தினம் வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவர் இன்று காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் தவறி நீரோட்டத்தில் வீழ்ந்துள்ளார்.
புத்தூர் – சுலைமதி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நீண்ட நேரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவரை மடக்கி பிடித்த மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் புத்தூர் மேற்கு கலைமதி பகுதி சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் 19 வயது இளைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வல்லை பாலத்திலிருந்து தூண்டில் போட்ட இளைஞன் நீரில் தவறி விழுந்து மாயம்!