Home Local news பாழடைந்த கட்டிடப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

பாழடைந்த கட்டிடப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கடந்த (26) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்னர்

வோட்வாடி வீதி களுவன்கேணி பிரதேசத்தைச்சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான பொன்னுத்துரை கருணாகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நீண்ட நாட்களாக தனது மனைவிற்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகறாரு காரணத்தினால் மனவேதனை அடைந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிவர் பல நாட்களாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த பாழடைந்த கட்டிடப்பகுதிக்கு சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் குறித்த நபர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனை கண்டு சம்பவத்தை உறவினர்களுக்கு தெரிவித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டம்
Previous article7 வருட காதலை மறந்து 5 மாத காதலனுடன் ஓட்டம்; உயிரை விட்ட காதலன்: உன்னை நினைத்து படம் போல சம்பவம்!
Next articleThe 10 Best Streaming Applications for 4K Content in 2022 (Android & iOS)