Home Accident News புளியங்குளம் விபத்தில் ஒருவர் பலி!

புளியங்குளம் விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (13) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனமும் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி பஞ்சநாதன் குகேந்திரன் (52) என்ற நபரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

FB IMG 1663060134979

புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் என்றழைக்கப்படும் பஞ்சநாதன் குபேந்திரன் (வயது-52) அவர்கள் இன்று காலை அகாலமரணமடைந்துள்ளார். அண்ணார் சரோஜாதேவியின் அன்புக் கணவனும், பாக்கியநாதன் (புரட்சி விளையாட்டுக்கழக வீரர்) கீர்த்தனா, விதுர்சனா ஆகியோரது அன்புத் தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

READ MORE >>>  யாழில் மூதாட்டி கொலை சந்தேகநபர் கைது
Previous articleபூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து தங்க நகைகளை திருடிவிட்டு மீளவும் பூட்டிச் சென்ற திருடர்..! யாழில் சம்பவம்
Next articleபெண் பொலிஸார் குளிப்​பதை மறைந்திருந்து பார்த்த சார்ஜென்ட்!