Home Accident News பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

திருமண நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பெண் ஒருவரும், சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாகவும், கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

READ MORE >>>  வயலை உழுது, நெல் விதைப்பில் ஈடுபட்ட சுமந்திரன் எம்.பி!
Previous articleவவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி
Next articleஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை தொற்றாளர்! சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு