நண்பர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நோட்டன்- அபடீன் நீர்வீழ்ச்சிக்கு நேற்று (28) சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (29) காலை மீட்கப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வீழ்ச்சியின் 15 அடி ஆழத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவை- லின்ஸ்ட்ட் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணன் வினுசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கினிகத்தேனை நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றி வரும் இவ்விளைஞன் 28ஆம் திகதி நண்பனின் பிறந்தநாளை கொண்டாட அபடீன் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று, அங்கு நீராடிக் கொண்டிருந்த போதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.