Home மட்டக்களப்பு செய்திகள் மட்டு வெல்லாவெளியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது

மட்டு வெல்லாவெளியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதனையடுத்து தலைமறைவாகிய இளைஞனை பொலிஸார் தேடிவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழ இரவு குறித்த இளைஞனை கைது செய்ததுடன் இவரை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

READ MORE >>>  யாழ் பஸ்களில் பெண்களின் தொலைபேசிகளை தொடர்ச்சியாக திருடியவருக்கு நடந்த கதி!!
Previous articleமண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளம் தாய்!
Next articleஇன்றைய ராசிபலன் – 26/01/2023, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..