Home Tamil News மதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மூக்குடைவு – யாழில் சம்பவம்

மதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மூக்குடைவு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனக் கூறி இருவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

அவ்வேளை அவ்வூர் மக்களினால் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை எனக் கூறி தப்பிச்செல்ல முயன்றவேளை அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் காவல் நிலையத்திலும் மற்றவர் ஐயன்கன்குளம் காவல் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE >>>  நோர்வேயில் வசிப்பவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சேர்ந்த இரு பெண்கள் கைது!
Previous articleஅக்காவை அடித்த அத்தானை கத்தரிக்கோலால் 4 முறை பதம் பார்த்த தம்பி! தலைமறைவான தம்பியை தேடுகிறது பொலிஸ்.
Next articleசாரதியிடம் கைநீட்டிய பொலிஸார் நால்வருக்கு நேர்ந்த கதி!