Home Local news மூன்று பிள்ளைகளின் தந்தையான மன்மதனை நம்பி அனைத்தையும் இழந்த பல்கலை கழக மாணவி!! கர்ப்பிணி மனைவியின்...

மூன்று பிள்ளைகளின் தந்தையான மன்மதனை நம்பி அனைத்தையும் இழந்த பல்கலை கழக மாணவி!! கர்ப்பிணி மனைவியின் கையை உடைத்த மன்மதன்

திருமணமாகி மூன்று பிள்ளைகளிற்கு தந்தையான ஒருவனை நம்பி 24 வயதான பல்கலை கழக மாணவி ஒருவர் சீரழிந்து போன சம்பவம் ஒன்று திருகோணமலை பாலையூற்று பகுதியில் நிகழ்ந்துள்ளது.

11 வயதில் பெண்குழந்தை ஒன்றும் 6 வயதான ஆண்குழந்தை ஒன்றும் தற்போது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் குறித்த சம்பவம் வெளிவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை பாலையூற்று பகுதியில் புகைப்பட கலையகம் ஒன்றை நடாத்தி வரும் 35 வயதான குறித்த நபரிற்கும் திருகோணமலை நகர் பகுதியை சேர்ந்த வீட்டிற்கு ஒரு பிள்ளையான 24 வயதான பெண்ணிற்கும் இடையில் தொடர்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் கல்வி பயின்று வருகின்றார்.

கடந்த ஆறு மாதங்களிற்கு முன்னர் ஏற்பட்ட தொடர்பு நாளடைவில் காதல் என்ற போர்வையில் எல்லை மீறி அந்தரங்க லீலைகளும் அரங்கேறும் அளவிற்கு சென்றுள்ளது.

விடுதிகள், தனிப்பட்ட வாகனங்கள் என பல தடவைகள் குறித்த பல்கலைகழக மாணவியுடன் அந்தரங்கமாக இருந்த அனைத்து காட்சிகளையும் குறித்த மன்மதன் வீடியோ காட்சிகளாக பதிவுசெய்து வைத்துள்ளார்.

காதல் மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு அப்போது அது விளங்கவில்லை. காதலன் தானே என எல்லாவற்ரையும் இழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களிற்கு முன்னர் கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் உறங்கிய பின்னர் தொலைபேசியை ஆரய்ந்த மனைவிக்கு தூக்கி வாரி போட்டது.

வீடியோக்கள், புகைப்படங்கள் என வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காட்சிகள் புகைப்படங்களை, வீடியோக்களை கண்ட மனைவிக்கு என்ன செய்வது என்ன்று எதுவுமே புரியவில்லை. எனது கணவனா இப்படி என அழுது புலம்பியுள்ளார்.

READ MORE >>>  நாய்க்கு போதை மருந்து கொடுத்துவிட்டு சைக்கிள் திருட்டு (காணொளி)

பின்னர் குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை கண்டறிந்து தனது கணவனின் லீலைகளை தெவிவித்த மனைவி தனது திருமண புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதை அறிந்த பல்கலை கழக மாணவிக்கு தான் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் புரிந்தது.

இதுவே போதும் இத்தோடு நிறுத்தி கொள்வோம் என நினைத்து மன்மதனுடனான தொடர்பை மாணவி குறைத்துக்கொண்டார்.

இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத மன்மதன் அந்தரங்க வீடியோ புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக தெரிவித்து மீண்டும் மாணவியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

காதலன் என நம்பியவனின் கோர முகத்தினை அறிந்துகொண்ட மாணவி குறித்த மன்மதனின் மனைவியான 6 மாத கர்பிணி பெண்ணுடன் தொடர்பினை எற்படுத்தி தனது நிலையை விளக்கியுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட கர்ப்பிணி பெண் தனது கணவருடன் முரண்பட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட மன்மதன் கதவிற்கு போடும் பார் கட்டையினை எடுத்து மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

கணவனின் தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற மனைவி இரண்டு கைகளையும் நீட்டியுள்ளார். இதனால் இரண்டு கைகளும் முறிந்து தொங்கியுள்ளது.

வலியால் கதறிய மனைவியை அப்படியே விட்டுவிட்டு குறித்த பல்கலை கழக மாணவியின் தாய்க்கும் அழைப்பை ஏற்படுத்தி மிரட்டியுள்ளார் மன்மதன்.

இதன் பின்னரே மகள் செய்துவந்த காரியம் தாய்க்கு புரிந்துள்ளது.

உடனடியாக மகளிடம் நடந்தவற்றை கேட்டறிந்து பொலிசாரிடம் முறைப்பாட்டினை பதிந்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இரண்டு கைகளும் முறிவடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிடமும் பொலிசார் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

விடயம் விபரீதமானதை உணர்ந்துகொண்ட மன்மதன் தற்போது தலைமறைவாகியுள்ளார் எனவும் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் எனவும் தெரியவருகின்றது.

Previous articleகணவனுக்கு மனைவியால் நேர்ந்த விபரீதம்
Next articleபாடசாலைக்கு முன்னால் போதைப் பொருளுடன் நின்ற குடும்பஸ்தர் கைது