Home Local news மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த 10 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! ஆசிரியர் கைது..

மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த 10 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! ஆசிரியர் கைது..

மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த 10 வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவபொத்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறியள்ள பொலிஸார் சந்தேக நபருக்கு அதே வயதுடைய ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தில் கைதான ஆசிரியர் நடத்திய பயிற்சி வகுப்பில் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியும் கலந்து கொண்டதாகவும், இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை சிறுமி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

READ MORE >>>  7 of the Best Apps for Recording Quick Videos on Your Android or iPhone
Previous articleமகளின் திருமண நாளில் நின்றுபோன அப்பாவின் இதயம்
Next articleகைக்குண்டை காட்டி பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர்