Home Jaffna News யாழில் இளம் சட்டத்தரணியுடன் மனைவி கள்ளத்தொர்பு என அறிந்து மாமியாரை தாக்கிய வைத்தியரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் இளம் சட்டத்தரணியுடன் மனைவி கள்ளத்தொர்பு என அறிந்து மாமியாரை தாக்கிய வைத்தியரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் இளம் சட்டத்தரணியுடன் தனது மனைவி கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர், மனைவியின் தாயாரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வைத்தியர் வாங்கிய காணி ஒன்றில் ஏற்கனவே விவசாயம் செய்து வந்தவர்கள் வெளியேறாத நிலையில் அந்த காணி தொடர்பாக ஏற்பட்ட முறுகலின் போது வைத்தியர் காணியில் விவசாயம் செய்தவரின் 17 வயது மகனை தாக்கியதாக வழக்கு ஒன்று பொலிசாரால் போடப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் வைத்தியரின் சார்பாக யாழில் இளம் சட்டத்தரணி ஒருவர் ஆயராகினார்.

அதன் பின்னர் அந்த வழக்கு இணக்க சபைக்கு போய் தீர்க்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் சட்டத்தரணிக்கு வைத்தியர் நண்பராகி அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதன் போதே மனைவியுடன் நட்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

வைத்தியர் வெளிமாவட்ட வைத்தியசாலை ஒன்றிலேயே கடமையாற்றி வருகின்றார். இந் நிலையில் வைத்தியர் இல்லாத நேரங்களிலும் சட்டத்தரணி வைத்தியரின் வீட்டில் வந்து மனைவியுடன் கதைத்துச் செல்வதாக வைத்தியர் அறிந்துள்ளார்.

இது தொடர்பாக மனைவியை எச்சரித்ததுடன் சட்டத்தரணியுடனும் தான் இல்லாத நேரங்களில் வீட்டுக்கு செல்வது ஏன்? என கேட்டு தர்க்கம் புரிந்ததுடன் சட்டத்தரணியையும் எச்சரித்ததாகத் தெரியவருகின்றது.

இதன் பின்னர் வைத்தியர் தனது வீட்டுக்கு சிசிரீவி கமாக்கள் பூட்டி தனது தொலைபேசியில் இருந்தே கண்காணித்து வந்துள்ளார். வைத்தியரின் மனைவி விஞ்ஞானப்பட்டதாரி எனவும் கடந்த வருடமே பட்டமளிப்பு விழா முடிந்து திருமணம் முடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியின் இரு சகோதரர்கள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் தெரியவருகின்றது. வைத்தியருக்கு சீதனமாகக் கொடுத்த வீட்டில் தந்தை மரணித்த நிலையில் தாயாரும் மனைவியுமே தனித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் வெளிமாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் திடீரென லீவு போட்டு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மனைவியைக் காணாததால் மனைவியின் தாயாரிடம் மனைவி எங்கே என கேட்டுள்ளார்.

தொலைபேசியில் அழைப்பு எடுத்து அவளை கேளுங்கள் என மாமியார் கூறியுள்ளார். இதனால் கடுப்பான வைத்தியர் மாமியாரை மொப்பர் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனை எதிர்பாராத மாமியார் கடுமையாக குக்குரல் இடத்து கத்த அயலில் உள்ளவர்கள் வைத்தியரிடம் இருந்து தாயாரை பாதுகாத்து வெளியேற்றியுள்ளார்.தாயார் தாக்கப்பட்டதை அறிந்து வீட்டுக்கு வந்த மனைவியையும் வைத்தியர் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

மனைவியையும் அயலவர்கள் மீட்டு வெளியேற்றியுள்ளார்கள். அதன் பின்னர் பொலிசாரிடம் மனைவி மற்றும் தாயார் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். பொலிசார் வைத்தியரை பொலிஸ் நிலையம் அழைத்துள்ளார்கள்.

வைத்தியர் அங்கு சென்ற போது அங்கு மனைவி மற்றும் தாயாருடன் குறித்த சட்டத்தரணியும் நின்றுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற வைத்தியர் பொலிஸ்நிலையத்திலேயே சட்டத்தரணியை தாக்க முற்பட்டதாகவும் பொலிசார் உடனடியாகத் தலையிட்டு தடுத்தாகவும் தெரியவருகின்றது.

தற்போது வைத்தியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வைத்தியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை தனக்கு லண்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொலை அச்சுறுத்தல் வருவதாகவும் ரவுடிகளைக் கொண்டு தன்னை கொலை செய்யப் போவதாக அவர்கள் அச்சுறுத்துவதாகவும் தொலைபேசி குரல்பதிவு ஆதாரங்களுடன் வைத்தியரும் பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Previous articleகிளிநொச்சியில் விபத்தில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
Next articleமசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!