Home Accident News யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..

யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தன. இதில் முன்னால் சென்ற பேருந்து கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. அதன் பின்னால் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்தை தடுக்க வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (23), பேருந்து சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி நாவலப்பிட்டியை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவியான அவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

FB IMG 1667638336291

FB IMG 1667638330538

FB IMG 1667638130827

FB IMG 1667638074637

FB IMG 1667638071369

FB IMG 1667638066551

வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்

 

READ MORE >>>  இளம் குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு! யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்
Previous articleவவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்
Next articleசிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி