Home Indian news விலக மறுத்த காதலனை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற காதலி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

விலக மறுத்த காதலனை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற காதலி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

காதலனை விசம் கொடுத்து கொன்றதற்காக கைதான இளம் பெண், பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் இருந்த லைசோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் அவர் நெடுமங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.அவரது கைது இன்று பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக நேற்று நடந்த விசாரணையில், களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன்ராஜுக்கு கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி – கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன்ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த மாதம் கிரீஷ்மாவுக்கு இராணுவவீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால், காதலியை விட்டு விலக ஷாரோன் ராஜ் தயாராக இருக்கவில்லை.

கிரீஷ்மா கடந்த 14ஆம் திகதி ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஷாரோன் ராஜிக்கு தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார்.

ஷாரோன்ராஜ் தனியாக கிரீஷ்மாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். பைக்கில் இருந்த அவரது நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக்கேட்டதற்கு, அவர் சரியாக பதில் சொல்லவில்லை எனகூறப்படுகிறது.

READ MORE >>>  25 முறை பல ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவி! காத்திருக்கும் கணவன்.

இந்த நிலையில் வீட்டுக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகள் செயல் இழந்தன. அதைத் தொடர்ந்து அவர் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.

கிரீஷ்மா வீட்டில் ஜூஸ் குடித்ததாக ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் வைத்து கூறியதைத் தொடர்ந்து அவரின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஷாரோன் ராஜின் உடலில் விஷம் சென்றுள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் முதற்கட்டமாக தகவல் தெரிவித்தனர்.

கிரீஷ்மா-வுக்கு ஏற்கனவே வேறு நபருடன் நிச்சயம் ஆனதால், அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஷாரோன் ராஜுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

அதே சமயம் தான் குடித்த மருந்து கஷாயத்தை ஷாரோன்ராஜ் கேட்டதால் குடிக்க கொடுத்ததாகவும், அது கசப்பாக இருப்பதாக ஷாரோன்ராஜ் கூறியதால் ஜூஸ் கொடுத்ததாகவும், மற்றபடி தங்கள் வீட்டில் விஷம் இல்லை என்றும் கிரீஷ்மா தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில் வழக்கு மாவட்ட கிரைம் பிராஞ்ச்க்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோரிடம் கிரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அதில் தனது மாமா பயன்படுத்தி வந்த கபிக் என்ற களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன்ராஜிக்கு கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து பூச்சிமருந்து போத்தலும் மீட்கப்பட்டது.

READ MORE >>>  பெண்ணிடம் பாரிய மோசடியில் ஈடுபட்ட போலிச் சாமியாரை பிடித்த பொலிஸார்!

தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததாகவும், தன்னை விட்டு விலக அவர் தயராக இருக்காததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

தனது முதல் கணவர் உயிரிழந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டுள்ளதாக ஒரு கதையை புனைந்த போதும், ஷாரோன் ராஜ் விலகாததால் கொலைக்கு திட்டமிட்டதாகவும், கொலைக்கு முன்னர் கூகிளில் தேடியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த ஷாரோன் ராஜ் முகம் கழுவ சென்ற சமயத்தில் ஆயுர்வேத மருந்தில் நஞ்சை கலந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், ஷாரோன்ராஜிம் ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது

Previous articleயாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன் பதற்றம்!
Next articleரூ.5.5 கோடிக்கு புத்தர் சிலை விற்க முயன்றவர்கள் கைது!