Home Ampara news வீட்டு தோட்டத்தில் 53 கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

வீட்டு தோட்டத்தில் 53 கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து காவல்துறையினர் திங்கட்கிழமை(24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரை கைது செய்தனர்.

கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் பாராப்படுத்த நடவடிக்கை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

READ MORE >>>  பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல்
Previous articleபொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை : மனோவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
Next articleவீதியில் நடந்து சென்ற இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற பேருந்து ஊரவர்களால் மடக்கி பிடிப்பு