Home Astology குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற தனுசு ராசி நேயர்களே! மூன்றில் வந்தது குரு பகவான்; முயற்சிகள் முடிவில் வெற்றிதரும்! பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 ல் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான்.

என்றாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் விரயங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது.

ஒரு காரியத்தை இருமுறை செய்யும் சூழ்நிலையும், உடன்இருப்பவர்களின் ஒத்துழைப்புக் குறைவும் உருவாகலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும், குரு ப்ரீதியும் செய்வதன் மூலம் நன்மைகளை அடைய முடியும்.

FB IMG 1636778886881

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே இந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. குறிப்பாக குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.

வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். ஆரோக்கியச் சீர்கேடுகள் படிப்படியாக அகலும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இன்னும் இருக்கின்றது என்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உறவினர்கள் வழியில் நீங்கள் உதவி செய்தாலும் கூட, அவர்கள் நன்றி காட்டுவார்களா என்பது சந்தேகம் தான். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது.

எனவே, எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தாலும் அதைச் செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும். தந்தை வழி உறவு வலுப்பெறும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் ஓரளவு பிரச்சினைகள் ஏற்பட்டு பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியலாம்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.

முன்னேற்றப் பாதையில் வந்த குறுக்கீடு சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். வாடகைக் கட்டிடத்தில் நடந்த தொழிலை இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் ஒருசிலருக்கு வாய்க்கும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நிதானத்துடன் செயல் படுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அந்த வீடு சுக்ரன் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன் களையே வழங்கும்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, மறைந்த ராகு நிறைந்த தன லாபத்தையே கொடுப்பார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆயினும், வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகளும், அவர்களுக்கு ஆரோக்கியத் தொல்லைகளும் உருவாகும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் ஓரளவு உங்களுக்கு நற்பலன்கள் நடைபெறும். ராசிநாதனாகக் குரு விளங்குவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வீடு மாற்றங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஒருசிலருக்கு ஏற்படலாம். ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பொழுது உடனே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 5-ம் இடத்திற்கு மாறப்போகின்றார்.

12-ல் சஞ்சரித்து வந்த கேது இனி 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்லப்போகின்றார். இதன் விளைவாகப் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

பூர்வீக சொத்துக்களை விற்கக் கூடிய சூழ்நிலை ஒருசிலருக்கு ஏற்படும். வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும்.

தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், தளரவிடவேண்டாம். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்யுங்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து லட்சுமி, விஷ்ணுவிற்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது.

இளையாற்றங்குடி நித்யகல்யாணி – கயிலாச நாதர் ஆலயத்திற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று அங்குள்ள குரு தட்சணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை
13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:
26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. உங்கள் ராசிக்கு 5, 12-க்கு அதிபதியான செவ்வாயை சகாய ஸ்தானாதிபதி சனி பார்க்கின்றார். பகைக்கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இருக்கும் பொழுது எந்த முயற்சி செய்தாலும் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தொழிலில் சில ஏமாற்றங்களும் உருவாகும்.

பொதுவாழ்வில் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். மனக்குழப்பம் ஏற்பட்டு எந்த வேலையையும் சரிவரச் செய்ய இயலாது. செவ்வாய்க்குரிய சிறப்பு வழிபாடுகளே உங்களுக்கு சீரான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் திருப்தி அளிக்காது. வரவு வந்த மறுநிமிடமே செலவாகலாம்.

வருங்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகளும், பிரச்சினைகளும் கூடும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஏற்படலாம்.

பணிபுரியும் பெண்களுக்கு பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. வைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- 13-11-2021 முதல் 12-11-2022 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிக ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- கும்ப ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள்- மீன ராசி

புத்தாண்டு பலன்கள் – தனுசு ராசி