Home Today Jaffna யாழ் போதானா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு

யாழ் போதானா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது.

இன்று காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இது திறந்து வைக்கப்பட்டது.

272023907 2047866475395522 760423218300043921 n

இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்திலேயே முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவனாந்தராஜா தெரிவித்தார்.