இங்கினியாகல, அம்பாறை, தெவலஹித பிரதேசத்தில் 13 வயது சிறுமியை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ( தாயார்) இருந்து கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி,
சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின்படி, இந்த சம்பவம் 22 நவம்பர் 2022 செவ்வாய்கிழமை நடந்துள்ளது.
இது தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் அம்பாறை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.
47 வயதுடைய சந்தேகநபர் குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாகவும் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் 071 – 8591150 / 063 – 2242022 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.