Home Tamil News 14 வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள்!! குடும்பஸ்தர் ஒருவர் மாட்டினார்!! இன்னொருவரிற்கு வலை வீச்சு

14 வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள்!! குடும்பஸ்தர் ஒருவர் மாட்டினார்!! இன்னொருவரிற்கு வலை வீச்சு

முள்ளியவளை பொலீஸ்பிரிவிற்கு உட்பட்ட ​ 14 வயது சிறுமி ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் வைத்து இரு இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவிற்கு பேருந்தில் சென்றுள்ளார்.

பின்னர், முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு முகமறியாதவர்களின் வாகனம் ஒன்றில் பயணித்து புதுக்குடியிருப்பை அடைந்துள்ளார்.

அங்கிருந்து கிளிநொச்சி செல்வதாக தெரிவித்த இளைஞன் ஒருவரின் உந்துருளியில் ஏறி பயணம் செய்துள்ளார்.

குறித்த சிறுமியை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு கொண்டு சென்ற இளைஞனால் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி வீதியில் விடப்பட்ட வேளை மற்றும் ஒரு இளைஞன் சிறுமிக்கு உதவுவதாக தெரிவித்து சிறுமியினை ஏற்றிச்சென்று பிறிதொரு இடத்தில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு வீதியில் கொண்டுவந்து விட்டுள்ளான்.

இரவு முழுவதும் வீதியில் பேருந்து தரிப்பிடத்தில் நின்ற சிறுமி சனிக்கிழமை காலை கிளிநொச்சி பேருந்தில் ஏறி கிளிநொச்சி சென்றுள்ளார்.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக குறித்த சிறுமி நடமாடிய நிலையில் ​ கிளிநொச்சி பொலீசாரால் மீட்கப்பட்டு விசாரணைக்கு புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் ஒப்படைக்கப்படுள்ளார்

புதுக்குடியிருப்பு பொலீசாரால் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய குடும்பஸ்தர் ​ ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு இளைஞனை பொலீசார் தேடிவருகின்றார்கள்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்

READ MORE >>>  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்
Previous articleமானிப்பாயில் இளைஞர் மீது இராணுவம், அதிரடிப்படை தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
Next articleபொகவந்தலாவை இளைஞனின் சடலம் கினிகத்தேனையில் மீட்பு