Home Ampara news 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் துஷ்பிரயோகம்!! பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் துஷ்பிரயோகம்!! பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, அவரது கணவர் வீட்டில் இல்லாதபோது அவரது 3 வயது பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவரினால் கத்திமுயைில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் கணவன் இல்லாத நிலையில் குறித்த பெண் சம்பவ தினமன்று தங்கியிருந்ததுடன் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவரினால் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அபயக்குரல் எழுப்பியும் எவரும் தன்னைக் காப்பாற்றவில்லை எனவும் தன்னை துஷ்பிரயோகப்படுத்திய நபர் 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தான் வழங்கிய முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட காரைதீவு பொலிஸ் நிலையம் தனக்கு நீதியான நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்த பாதிக்கபப்ட்ட பெண், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கமைய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

READ MORE >>>  தேரேறி அருள் பாலித்த நல்லூர் கந்தன்
Previous articleபல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!! ஆர்ப்பாட்டத்தில் மாணவர் ஒன்றியத் தலைவர் கைது
Next articleஹோமாகம பிரதேசத்தில் திடீரென உயிரிழந்த 15 மான்கள்!